ஆலையடிவேம்பு பிரதேச சபைக்கு உட்பட்ட சாகாம வீதியின் பனங்காட்டு பாலம் வரையிலான காப்பட் பாதையை பாதுகாக்கும் முகமாக பராமரிப்பு பணி முன்னெடுப்பு…

-கிரிசாந் மகாதேவன்-
படங்கள்- கபிஷன்
அக்கரைப்பற்று தமிழ் பிரிவு, ஆலையடிவேம்பு பிரதேச சபைக்கு உட்பட்ட அக்கரைப்பற்றில் இருந்து சாகாமம் நோக்கி செல்லும் சாகாம வீதி என அழைக்கப்படும் பனங்காட்டு பாலம் வரையிலான காப்பட் பாதையின் (Shoulder) என அழைக்கப்படும் பாதையின் இரு மருங்கு பகுதிகள் ஆங்காங்கே அரிப்படைந்ததாக (Erosion) காணப்பட்ட நிலையில் குறித்த விடயம் தொடர்பாக பிரதேச பற்றாளர் ஒருவரினால் முகநூல் பதிவொன்று மூலமாக பலர் கவனத்திற்கு கொண்டு சென்று இருந்தார்.
காப்பட் பாதையின் (Shoulder) இரு மருங்கு பகுதிகள் அரிப்படைவதால் பெறுமதி மிக்க காப்பட் பாதை விரைவில் உடைந்து சேதமடையும் மற்றும் வாகன விபத்துக்களும் அதிகளவு ஏற்படும் சாந்தப்பம் காணப்படும்.
குறித்த விடயங்களை கவனத்தில் கொண்ட ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் த.கிரோஜாதரன் அவர்கள் உடனடியாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அக்கரைப்பற்று காரியாலய நிறைவேற்று பொறியியலாளர் அவர்களுடன் குறித்த விடயம் தொடர்பாக கலந்துரையாடியும் இருந்த நிலையில்.
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அக்கரைப்பற்று காரியாலய நிறைவேற்றுப் பொறியியலாளர் வீதி பராமரிப்பு தொடர்பான ஆரோக்கியமான முகநூல் பதிவு மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளரின் குறித்த விடயம் தொடர்பான முன்னெடுப்புகளுக்கு உடனடி கவனம் செலுத்தி பாதையின் பராமரிப்பு பணிகளை ஆரம்பித்தார்.
அந்த வகையில் பாதையின் பராமரிப்பு பணியானது நான்கு நாட்களை கடந்தும் நடைபெற்று வருகின்றது.
மேலும் குறித்த வீதி பராமரிப்பு பணிகள் தற்போது ஆழம் குறைந்த இடங்களுக்கு தற்போது கிறவல் இடப்பட்டு செப்பனிட்டு வருகின்றனர். அடுத்த கட்டமாக ஆழம் கூடிய பகுதிகள் செப்பனிடப்படுவதற்கு (Compaction போன்ற விடயங்களை மேற்கொள்வதற்கு சக்தி வாய்ந்த இயந்திரங்கள் தேவைப்படுவதனால்) இயந்திரங்களை பெற்றுக்கொண்டு குறித்த பகுதிகளையும் விரைவில் செப்பனிட திட்டமிடப்பட்டு உள்ளதுவும் குறிப்பிடத்தக்கது.
குறித்த வீதி பராமரிப்பு பணி இடம்பெறுவதற்கு காரணமாக இருந்த பிரதேச பற்றாளர், பிரதேச சபை தவிசாளர், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அக்கரைப்பற்று காரியாலய நிறைவேற்று பொறியியலாளர், அக்கரைப்பற்று வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வீதி பராமரிப்பு பிரிவின் அதிகாரிகள் அனைவருக்கும் பிரதேச மக்கள் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றனர்.