ஆலையடிவேம்பு
”கொரோனா வைரஸ் முற்பாதுகாப்பு உதவித்திட்டம்” எனும் கருத்திட்டத்துக்கு அமைவாக கிடைக்கப்பட்ட பணத்தினை பகிரங்கமாக அறியத்தருகின்றோம்.


Alayadivembuweb.lk இணையத்தள இணையகுழு ஆகிய எங்களால் ”மாபெரும் கொரோனா தடுப்பு முற்பாதுகாப்பு செயத்திட்டம்” எனும் செயற்பாடு மேற்கொள்ளப்பட்டது.
இதனில் ஒரு அம்சமாக ”கொரோனா வைரஸ் முற்பாதுகாப்பு உதவித்திட்டம்” எனும் கருத்திட்டத்துக்கு அமைவாக கிடைக்கப்பட்ட பணத்தினை பகிரங்கமாக அறியத்தருகின்றோம்.
பணம் இடப்பட்ட பொட்டியானது எமது இணையதளத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் M.கிரிசாந், தலைவர் C.காபிசன், செயலாளர் V.கிஷோர், பொருளாளர் Y.ஜினுஜன் மற்றும் உறுப்பினர் K.யதுர்சன் என்பவர்கள் முன்னிலையில் பிரிக்கப்பட்டது.
”கொரோனா வைரஸ் முற்பாதுகாப்பு உதவித்திட்டத்திற்கு 12,106/- (பன்னிரெண்டாயிரத்து நூற்று ஆறு ரூபாய்) பணம் கிடைக்கப்பெற்றது .
குறித்த ”கொரோனா வைரஸ் முற்பாதுகாப்பு உதவித்திட்டம்” ஆனது தனவந்தர்களிடம் இருந்து தன்னார்வமாக வழங்கப்படும் நிதி உதவியினை பெற்று சேமித்து கொரோனா நிலை எமது பிரதேசத்தில் தீவிரம் அடைந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் நலிவடைந்த குடும்பங்களுக்கு உதவி வழங்கல் எனும் தூரநோக்கு செயத்திட்டமாக செயப்படுத்தப்பட்டது அவ்வாறே மேல்குறிப்பிட்ட பணத்தொகையானது பயன்படுத்தப்படும்.
அவ்வாறு எமது பிரதேசத்தில் கொரோனா தொடர்பான முடக்கம் இடம்பெறாமல் இருந்தால் மேல்குறிப்பிட்ட பணத்தொகையானது பிறிதொரு வகையில் எமது ஆலையடிவேம்பு பிரதேச சமூகம் பயனடையும் முகமாக Alaiyadivembuweb.lk இணையக்குழுவினரினால் பயன்படுத்தப்படும் என்பதனை அறியத்தருகின்றோம்.
– Alaiyadivembuweb.lk இணையக்குழு –

