கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமெரிக்கர்களுக்கு கிடைக்கும் நம்ப முடியாத நிவாரணம்

அமெரிக்காவின் செனட் சபை உறுப்பினர்களும், டொனால்ட் ட்ரம்ப் தரப்பு நிர்வாகிகளும் நடத்திய பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸுக்கான தீர்வு தொடர்பாக இரு தரப்புக்கும் இடையில் நடைபெற்று வந்த பேச்சுவார்த்தையில், கொரோனா வைரஸ் பாதிப்பினை ஈடு செய்ய பாரிய தொகை ஒன்றினை ஒதுக்கீடு செய்வதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக, வெள்ளை மாளிகையின் அதிகாரி எரிக் யூலன்ட் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் குறித்த ஒதுக்கீட்டுக்கான தொகை 2 ட்ரில்லியன் அமெரிக்க டொலர்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தாம் ஓர் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளதாக அவர் மேலும் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும், குடியரசு கட்சி தலைவர் மிச் மெக்கோனியெல் (Mitch McConnell) செனட் சபையில் குறித்த ஒப்பந்தம் தொடர்பாக விவாதிக்க எதிர்பார்த்ததாகவும், எனினும் குறித்த ஒப்பந்த பிரதிகள் இன்று(புதன்கிழமை) பிற்பகலுக்குள் தயாராகும் என எதிர்பார்க்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஒதுக்கீட்டில், 500 பில்லியன் டொலர்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு வழங்கவும், பாதிக்கப்பட்ட மில்லியன் கணக்கான அமெரிக்க குடும்பங்களுக்கு 300 டொலர்கள் வரை நேரடி பணமாக வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 350 பில்லியன் டொலர்கள் சிறு வியாபார கடன்களுக்கும், 250 பில்லியன் டொலர்கள் வேலையிழந்த தொழிலாளர்களுக்கும், 75 பில்லியன் டொலர்கள் வைத்தியசாலை நடவடிக்கைகளுக்கும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.