வாழ்வியல்

இந்த பக்கவிளைவுகளை ஏற்படுத்துமாம்! காலை 10 மணிக்கு முன் மறந்து கூட இந்த உணவுகளை சாப்பிடாதீங்க….

இன்றைய அவசர உலகில் பலரும் நம்மில் பலர் ஆரோக்கியமானது என்று கருதி, காலை வேளையில் ஒருசில தவறான உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுகின்றனர்.

இது பலவகையில் பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதாக ஆய்வுகளில் கூறப்படுகின்றது.

அந்தவகையில் அந்த உணவுகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • காலை உணவு என்பது கொழுப்பு இல்லாத உணவாக இருக்கக்கூடாது. வெண்ணெயில் வைட்டமின்களை பதப்படுத்த உதவும் கொழுப்புக்கள் உள்ளது. ஆனால் இதில் ஆரோக்கியமற்ற சாச்சுரேட்டட் கொழுப்புக்களும் உள்ளது. இது உங்கள் இதயத்திற்கு சேதத்தை விளைவிக்கும் மற்றும் உடல் எடையை அதிகரிக்கும்.

 

  • செரில்கள் ஏராளமான மக்கள் சாப்பிடும் ஒரு காலை உணவாகும். இதில் சர்க்கரை அதிகம் உள்ளது. இது அடிவயிற்றில் கொழுப்புத் தேக்கத்தை அதிகரிக்கும். எனவே இதனை தவிர்க்க வேண்டும்.
  • உறைய வைக்கப்பட்ட பேன் கேக்குகள், வாஃபிள்ஸ் மற்றும் குக்கீஸ் போன்ற சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். ஏனெனில் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த உணவுகள் பசியை ஏற்படுத்தும், நார்ச்சத்துக்கள் சிறிதும் இல்லை மற்றும் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் ட்ரான்ஸ் கொழுப்புக்கள் அதிகம் உள்ளன.
  • கொழுப்பு குறைவான சில யோகர்ட்டுகளில் ப்ளேவருக்காக சர்க்கரை அதிகமாகவும், புரோட்டீன் குறைவாகவும் விற்றகப்படுகின்றது. இதை உண்ணும் போது, அது பகல் நேரத்தில் பசி அதிகம் எடுப்பதைக் குறைக்கும்.
  • பழச்சாறுகளில் சோடாவைப் போன்றே சர்க்கரையும் அதிகம் இருக்கின்றது. எனவே காலை உணவின் போது பழச்சாறுகளை சேர்ப்பது ஒரு மோசமான தேர்வாகும். இதில் நார்ச்சத்து இல்லை.
  • ஆப்பிள்கள், பூண்டு, பேரிக்காய், பீன்ஸ் மற்றும் பீச் என அனைத்தும் புளிக்கக்கூடிய ஒலிகோசாக்கரைடுகள், டிசாக்கரைடுகள், மோனோசாக்கரைடுகள் மற்றும் பாலியோல்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. இவற்றில் கார்போஹைட்ரேட்டுக்கள் அதிகம் இருக்கின்றன. இது செரிமானமாவது சற்று கடினமாக இருக்கும். இதனால் இது வயிறு மற்றும் குடலில் நொதித்தலுக்கு வழிவகுத்து, வயிற்று உப்புசத்தை உண்டாக்குகிறது.
சாப்பிட வேண்டிய உணவுகள்
  • பழங்களை காலையில் செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை தூண்டுவதற்கான சிறந்த வழி மற்றும் மதிய வேளையில் உயர் கலோரி உணவுகளை உண்பதற்கும் தயார் செய்கிறது.
  • வேர்க்கடலை வெண்ணெய் பகல் நேரத்தில் பசியுணர்வைக் குறைக்க உதவும். ஏனெனில் இது பசியுணர்வை சீராக்கும் ஹார்மோனான பெப்டைடு YY உற்பத்தியை அதிகரிக்கிறது. ஆகவே இது ஒரு சிறப்பான காலை உணவாக இருக்கும்.
  • சுகர்-ப்ரீ ஓட்ஸை சாப்பிடலாம். மதியத்திற்கு முன்பே சோர்வடைவதைத் தடுக்க உதவும். நீங்கள் சர்க்கரை கொண்ட ப்ளேக்ஸ் சாப்பிட வேண்டுமானால், பெரிய அளவிலான ப்ளேக்ஸை வாங்குங்கள்.
  • வீட்டிலேயே முழு தானிய மாவால் தயாரிக்கப்பட்ட பேன் கேக்குகளை செய்து சாப்பிடலாம். இவற்றில் நார்ச்சத்து அதிகம் இருக்கும். இல்லாவிட்டால், முழு தானிய பிரட்டுகளை டோஸ்ட் செய்தும் சாப்பிடலாம்.
  • ஃபிட்டாக இருக்க சர்க்கரை இல்லாத கொழுப்பு நிறைந்த யோகர்ட்டுகளை வாங்கி சாப்பிடுங்கள்.
  • ஆப்பிள்கள், பூண்டு, பேரிக்காய், பீன்ஸ் மற்றும் பீச் போன்றவற்றை குறைவான அளவில் ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் புரோட்டீனுடன் எடுத்தால், அது எளிதில் செரிமானமாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker