இலங்கைசுவாரசியம்
குழந்தை பிரசவித்த ஆண் – மாத்தறையில் சம்பவம்!

ஆணொருவர் குழந்தை பிரசவித்த அதிர்ச்சி சம்பவம் மாத்தறையில் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, தனது அடையாள அட்டை மற்றும் ஆவணங்கள் சகிதம் மாத்தறை வைத்தியசாலைக்கு சென்ற ஆணொருவர் தனக்கு வயிற்றில் வலி இருப்பதாக தெரிவித்ததையடுத்து அவரை வைத்தியசாலையில் அனுமதிக்க மருத்துவர்கள் தீர்மானித்தனர்.
வயிற்றுவலி அதிகமானதையடுத்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஆண் போல நடித்த பெண் என்பதை கண்டறிந்து அவரை பிரசவ விடுதிக்கு அனுப்பினர். இதனையடுத்து ஆண்குழந்தை ஒன்று அவருக்கு பிறந்துள்ளது.
26 வயதுடைய தெவிநுவர பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு ஆண் போல வேடமிட்டு வந்தவரென்றும் நீண்ட நாள் இவர் அப்பகுதியில் முச்சகர வண்டி சாரதியாக தொழில் செய்து வந்தவரென்றும் தெரியவந்துள்ளது.