கிழக்கில்’’டித்வா’’ புயலால் 221 பாடசாலைகள் பாதிப்பு – கிழக்கு மாகாண ஆளுநர்!

கிழக்கு மாகாணத்தில்”டித்வா” புயல் மற்றும் மழை வெள்ளம் காரணமாக 221 பாடசாலைகள் பாதிக்கபட்டுள்ளது என்று மாகாண ஆளுநர் ஜெயந்தலால் ரத்தணசேகர தகவல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட பாடசாலைகள் குறித்து ஆளுநர் இன்று(6) ஊடகங்களுக்கு தகவல் வழங்கினார்.
அதன்படி மாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு,அம்பாறை நிர்வாக மாவட்டங்களை உள்ளடக்கிய 15 கல்வி வலயங்களில் மொத்தமாக 221 பாடசாலைகள் பாதிக்கப்பட்டுள்ளது. மூன்று மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் எண்ணிக்கை வலய ரீதியாக வருமாறு,
திருகோணமலை மாவட்டம்
மூதூர் வலயம் -25
கந்தளாய். – 15
கிண்ணியா. – 12
திருகோணமலை வடக்கு-04
இதன்படி மாவட்டத்தில் 56 பாடசாலைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டம்
மட்டக்களப்பு. -32
மட்டக்களப்பு மத்தி -13
மட்டக்களப்பு மேற்கு -13
கல்குடா. -23
பட்டிருப்பு. -14
மொத்தம். 95 பாடசாலைகள்
அம்பாறை மாவட்டம்
அம்பாறை. -03
தெகியத்தகண்டி. -12
அக்கரைப்பற்று. -23
கல்முனை. -17
சம்மாந்துறை. -06
திருக்கோவில். -09
மொத்தம். 70 பாடசாலைகள்.
இவ் புள்ளி விபரங்களின்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் 95 என்ற அதிகூடிய எண்ணிக்கையான பாடசாலைகள் பாதிப்பிற்குள்ளாகியுள்ளன. அதனை அடுத்து அம்பாறையில் 70 பாடசாலைகளும்,திருகோணமலையில் 56 பாடசாலைகளும் பாதிக்கப்பட்டுள்ளது. இதே வேளை அடுத்த தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட முன்னர் பாதிக்கப்பட்ட பாடசாலைகள் அனைத்தும் துரித கதியில் மீள திருத்தி அமைக்கப்படும் எனவும் ஆளுநர் கூறியுள்ளார்.


