இலங்கை
அக்கரைப்பற்றுக்கான போக்குவரத்திற்கு கட்டுப்பாடு!

அக்கரைப்பற்றுக்கு செல்வதற்கு அத்தியாவசிய சேவையாளர்கள் தவிர்ந்து ஏனையோர் போக்குவரத்துக்கு இன்று அனுமதிக்கப்டவில்லை அக்கரைப்பற்று பிரதேசத்தில் இருந்து வெளிப்பிரதேசங்களுக்கும் வெளிப்பிரதேசங்களில் இருந்து அக்கரைப்பற்று பிரதேசத்திற்கும் பொதுமக்கள் போக்குவரத்து செய்வதற்கு அனுமதிக்கப்படவில்லை.
நேற்றையதினம் (9) அக்கரைப்பற்று 19 ஆம் பிரிவில் கொரனா நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்தே இந்த கட்டுப்பாடு நட்டிவடிக்கை எடுக்கப்ட்டிருந்தது.
கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதி, ஒலிவில் பாலத்தில் தடை ஏற்படுத்தப்பட்டிருந்து அவ்வாறே ஏனைய அக்கரைப்பற்றுக்கான வீதிகளிலும் தடை எற்படுத்தப்பட்டிருந்தன. இந்நடவடிக்கைகளில் பொலிஸாரும், இராணுவத்தினரும் கடைமையில் ஈடுபட்டிருந்தனர்.