ஆலையடிவேம்பு
கண்ணகி கிராம மகாசக்தி பாலர் பாடசாலைக்கு கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணிமனையின் ஊடாக விளையாட்டு உபகரணம் வழங்கிவைப்பு…..

பிரதமர் ஹருணி அமரசூரிய அம்மையாரின் நிகழ்ச்சி நிரல் படுத்தலின் கீழ் கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணிமனையின் ஊடாக சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணம் வழங்கும் நிகழ்ச்சி திட்டம்
கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணிமனையின் சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணம் வழங்கும் நிகழ்ச்சி திட்டதின் கீழ் அம்பாரை மாவட்ட பாலர் பாடசாலைகளில் முதற் கட்டமாக 04 பாடசாலைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
அந்த வகையில் ஆலையடிவேம்பு பிரதேச மக்கள் சக்தியின் ஒருங்கிணைப்பு குழுவின் கோரிக்கைக்கு அமைய பொத்துவில் தொகுதி அமைப்பாளரின் முயற்சியால் கண்ணகி கிராமம் பிரிவு -01 மகாசக்தி பாலர் பாடசாலைக்கான விளையாட்டு உபகரணம் கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணிமனையின் ஊடாக வழங்கி வைக்கப்பட்டது.