இலங்கை
திருக்கோவில் சகலகலை முன்பள்ளியில் கல்வி கற்கும் பிள்ளைகளின் குடும்பங்களுக்கு கொவிட் இடர் கால நிவாரண உதவி வழங்கல் நிகழ்வு…

திருக்கோவில் சகலகலை முன்பள்ளியில் கல்வி கற்கும் பிள்ளைகளின் மிகவும் வறுமையான 25 குடும்பங்களுக்கு தலா Rs.1750/- பெறுமதியான நிவாரணம் முன்பள்ளி கல்வி பணியக உத்தியோகத்தர் திரு.பி.மோகனதாஸ் அவர்களின் வேண்டுகோளிற்கு அமைய இன்றைய தினம் (03) வழங்கிவைக்கப்பட்டது.
குறித்த நன்மை பயக்கும் நிவாரண உதவிகள் அம்மன் மகளிர் இல்ல பவுண்டேசன் ஊடாக பணிப்பாளர் திரு.வே. வாமதேவன் அவர்களால் சற்குரு சரவணபாபாவின் ஆசியில் 42 ஆம் ஜெயந்தி தின நிதி அனுசரணையில் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.