யாழ்ப்பாணத்தில் வாழும் தம்பதிகளுக்கு அடித்தது மகாயோகம்…மூன்று பிள்ளைகளுக்கு மேல் பெற்றால்…!

மூன்று பிள்ளைகளுக்கு மேல் பெற்றால் அக்குடும்பத்திற்கு பணப் பரிசில் வழங்கவுள்ளதாக நிறைவேற்றப்பட்ட திட்டத்திற்கு இதுவரை யாரும் பதிவு செய்யப்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்களின்படி வல்வெட்டித்துறை நகர சபைக்குட்பட்ட பிரதேசத்தில் தமிழ் மக்களின் இருப்பை பாதுகாப்பதற்காக 3 பிள்ளைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ளும் குடும்பத்தினருக்கு வல்வெட்டித்துறை நகரசபையினால் மாதாந்தம் 10ஆயிரம் ரூபா மானியமாக வழங்க முன்வந்துள்ளபோதும் எவரும் பதிவுகளை மேற்கொள்ளவில்லை என வல்வெட்டித்துறை நகர பிதா தெரிவித்துள்ளார்.
3 பிள்ளைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ளும் குடும்பத்தினருக்கு, மாதாந்தம் 10ஆயிரம் ரூபா வழங்கும் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இதுவரை எவரும் பதிவுகளை மேற்கொள்ளவில்லை என யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை நகரபிதா கருணாகரமூர்த்தி தெரிவித்தார்.வல்வெட்டித்துறை நகரசபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே இவ்விடயத்தினை நகரபிதா தெரிவித்துள்ளார்.