இலங்கை
Trending

உள்ளூராட்சி சபைத் தேர்தல் 2025 வாக்களிப்பு நிறைவு : சற்று நேரத்தில் வாக்கெண்ணும் நடவடிக்கை ஆரம்பம்

 

உள்ளூராட்சி சபைத் தேர்தல் 2025 வாக்களிப்பு நடவடிக்கைகள் நிறைவுற்றுள்ளதாகவும் அமைதியான முறையில் செயற்படுமாறும் தேர்தல் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

2025 உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (06) காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4:00 மணிக்கு நிறைவடைந்தது.

இந்நிலையில், சற்றுநேரத்தில் வாக்கெண்ணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி மன்ற அதிகார சபைகள் வாக்கெடுப்பு கட்டளைச்சட்டத்தின் படி 8287 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 339 உள்ளூராட்சிமன்ற அதிகார சபைகளுக்கான தேர்தல் வாக்கெடுப்பு இன்று இடம்பெற்று தற்போது நிறைவடைந்துள்ளது.

இதன் மூலம் 28 மாநகர சபைகளுக்கும் 36 நகர சபைகளுக்கும் 275 பிரதேச சபைகளுக்கும் 8,287 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் இடம்பெற்றுள்ளது.

நாடளாவிய ரீதியில் 4877 உள்ளூராட்சி மன்ற அதிகார சபை வட்டாரங்களில் அமைக்கப்பட்டுள்ள 13, 759 வாக்களிப்பு மத்திய நிலையங்கள் ஊடாக இன்று வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றன.

வாக்கெண்ணும் பணிகளுக்காக தொகுதி மட்டத்தில் 5,783 மத்திய நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. இன்னும் சற்று நேரத்தில் குறித்து வாக்கெண்ணும் மத்திய நிலையங்களில் வாக்குகள் எண்ணப்படவுள்ளன.

அங்கீகரிக்கப்பட்ட 49 அரசியல் கட்சிகள் மற்றும் 257 சுயோட்சைக் குழுக்கள் சார்பில் 75,589 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றன நிலையில், 2024 ஆம் ஆண்டுக்கான தேருநர் இடாப்பின் கூட்டிணைக்கப்பட்ட பெயர் பட்டியலுக்கமைய இம்முறை 17,156,338 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker