நிவாரணப்பணிகளில் இலங்கை பொலிசாரும் இணைந்துள்ளனர்- 400 குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொதிகளும் அலிக்கம்பை தேவகிராமத்தில் வழங்கி வைக்கப்பட்டன.

வி.சுகிர்தகுமார்
இதற்கமைவாக அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படும் அலிக்கம்பை தேவகிராமத்தில் வாழும் ஒட்டுமொத்த மக்களுக்கும் இன்று நிவாரணப்பொதிகளை பொலிசார் வழங்கி வைத்தனர்.
இதன் பிரகாரம் இக்கிராமத்தில் வாழும் சுமார் 400 குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொதிகளும் பொதுச்சுகாதார பரிசோதகர்களின் பரிசீலனையின் பின்னர் நேற்று (02) வழங்கி வைக்கப்பட்டன.
அக்கரைப்பற்று உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.எச்.பிரதீப் குமார தலைமையில் இடம்பெற்ற நிவாரணப்பணியில் அம்பாரை மாவட்ட பிரதி பொலிஸ் அத்தியட்சகர் சி.எம்.டி.ஜெயந்த ரெட்நாயக்க கலந்து கொண்டு மக்களுக்கான நிவாரணப்பணியை ஆரம்பித்து வைத்ததுடன் முகக்கவங்களையும் வழங்கி வைத்தார்.
நிகழ்வில் தேவ கிராம தேவாலயத்தின் பங்குத்தந்தை அருட்திரு சூசைநாயகம் ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன் அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யு.சி.பி.எம்.விஜயதுங்க கிராம உத்தியோகத்தர் சு.சுஜித் மதுசங்க மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் குடும்ப நல உத்தியோகத்தர் பொலிசார் என பலரும் கலந்து கொண்டனர்.
இப்பணியை மேற்கொள்வதற்காக குறித்த பிரிவின் கிராம உத்தியோகத்தர் சு.சுஜித்மதுசங்க மற்றும் தேவ கிராம தேவாலயத்தின் பங்குத்தந்தை அருட்திரு சூசைநாயகம் உள்ளிட்ட கிராமத்தின் இளைஞர்கள் பாரிய ஒத்துழைப்பை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.