இலங்கை

மட்டு. கிரான்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிராண்குளம் பகுதியில் நேற்று (செவ்வாய்கிழமை) இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்

மட்டக்களப்பு,களுதாவளை பகுதியை சேர்ந்த 27 வயது மதிக்கதக்க இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

கல்முனையில் இருந்து வந்த காரும் மட்டக்களப்பில் இருந்து சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் .

இதன்போது உயிரிழந்தவரின் சடலம் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன்,மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker