இலங்கை
இலங்கையில் வாகன இலக்க தகடுகளில் மாற்றம்!

இலங்கையில் வாகன இலக்க தகடுகளில் மாகாணங்களை குறிக்கும் ஆங்கில எழுத்துக்களை நீக்குவதற்கான அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.
மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் சுமித் அழககோன் இதனை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 2 மாதங்களுக்குள் குறித்த நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை காலமும் வாகன இலக்கத் தகடுகளால் வாகன பரிமாற்றங்களின் போது பெரும் பிரச்சினைகளை மோட்டார் பதிவு திணைக்களம் எதிர்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்சமயம் வாகன இலக்கத் தகடுகளில் மாகாணத்தை குறிக்கும் ஆங்கில எழுத்துக்கள் நீக்கப்படுவதனால் வாகனப் பரிமாற்றங்களில் ஈடுபடுவோர் தங்களின் செயற்பாடுகளை இலகுவாக மாற்றிக்கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.