இலங்கை
சீரற்ற வானிலை: சில பாடசாலைகளுக்கு நாளை விடுமறை

சீரற்ற வானிலை காரணமாக தென் மாகாணத்தின் பல பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் ஹம்பாந்தோட்டை மாவட்டம், மாத்தறை மாவட்டத்தின் முலட்டியான கல்வி வலயத்திற்கு உட்பட அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தென் மாகாண ஆளுநர் இந்த உத்தரவை வழங்கியுள்ளார்.