உலகம்
தடுப்பூசியினை மக்களுக்கு இலவசமாக வழங்குவதற்கு சீனா நடவடிக்கை

சீனாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியினை அந்நாட்டு மக்களுக்கு இலவசமாக வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த நிலையில், சீனாவில் உருவாக்கப்பட்டுள்ள சினபோர்ம் தடுப்பூசியினை பொது மக்களுக்கு வழங்குவதற்கு நிபந்தனை அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையிலே, குறித்த தடுப்பூசியினை இலவசமாக மக்களுக்கு வழங்குவதற்கு சீன அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த தடுப்பூசியானது 60-70% பாதுகாப்பானது என்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்றும் சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.