இலங்கை
இணைந்த கரங்களினால் ஆசிரியர் பற்றாக்குறையான பாடசாலைகளுக்கு தொண்டர் ஆசிரியர்களை நியமித்து வகுப்புகள் ஆரம்பிப்பு…

இணைந்த கரங்கள் அமைப்பினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மட்/மமே/இழுப்படிச்சேனை அம்பாள் வித்தியாலய பாடசாலையில் குறிப்பிட்ட சில மாதங்களாக கணித பாடத்தினை மாணவர்களுக்கு கற்பிப்பதற்கான ஆசிரியர் இல்லாத காரணத்தினால் வலயக் கல்வி அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க இணைந்த கரங்கள் அமைப்பினால் ஆறு மாதங்களுக்கான கற்பிப்பதற்கான ஆசிரியரினை வழங்கும் ஆரம்பம் நிகழ்வு (21) மட் /மமே/இழுப்படிச்சேனை அம்பாள் வித்தியாலய அதிபர் தலைமையில் இடம்பெற்றிருந்தது.
மமே/இழுப்படிச்சேனை அம்பாள் வித்தியாலயத்தில் கல்வி கற்பிக்கும் ஆசிரியருக்காண ஒரு மாதம் Rs/20000 ரூபாவை இணைந்த கரங்கள் உறவுகள் ஊடாக பயணிக்கும் Sydney Australia.அமைந்துள்ள ( Xdream Jewellery ) நிறுவனத்தின் உரிமையாளரான, பாக்கியராசா அவர்களால் வழங்கப்படுகின்றது.