ஆலையடிவேம்பு பிரதேச பாடசாலைகளின் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களின் எண்ணிக்கைகள் விபரங்கள்: திருக்கோவில் கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் ஆலையடிவேம்பு பிரதேச பாடசாலை முன்னிலையில்…..

கடந்த 2021 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுகள் கடந்த (13) ஞாயிற்றுக்கிழமை மாலை வெளியாகிய நிலையில் திருக்கோவில் கல்வி வலயத்திற்கு உட்பட்ட ஆலையடிவேம்பு பிரதேச பாடசாலைகளின் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களின் எண்ணிக்கைகள் வெளியாகி உள்ளநிலையில்.
ஆலையடிவேம்பு பிரதேச கமு/திகோ/திருவள்ளுவர் வித்தியாலயத்தில் 2021ம் ஆண்டு புலமைப்பரிசையில் 91 மாணவர்கள் தோற்றியிருந்தனர். இவர்களில் 24 மாணவர்கள் (147) வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றதுடன் 86 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றிருந்தனர்.
மேலும் திருக்கோவில் கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் அதிகூடிய மாணவர்கள் சித்தியடைந்த பாடசாலையாக கமு/திகோ/திருவள்ளுவர் வித்தியாலயம் முன்னிலையில் அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆலையடிவேம்பு பிரதேச கமு/திகோ/அன்னை சாரதா கலவன் பாடசாலையில் புலமைப்பரிசையில் 100 மாணவர்கள் தோற்றியிருந்தனர். இவர்களில் 12 மாணவர்கள் (147) வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றதுடன் 91 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றிருந்தனர்.
ஆலையடிவேம்பு பிரதேச கமு/திகோ/பாசுபதேசுவரர் வித்தியாலயத்தில் புலமைப்பரிசையில் 09 மாணவர்கள் (147) வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றிருந்தனர்.
ஆலையடிவேம்பு பிரதேச கமு/திகோ/பெருநாவலர் வித்தியாலயத்தில் புலமைப்பரிசையில் 26 மாணவர்கள் தோற்றியிருந்தனர். இவர்களில் 08 மாணவர்கள் (147) வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றதுடன் 24 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றிருந்தனர்.
ஆலையடிவேம்பு பிரதேச கமு/திகோ/கோளவில் விநாயகர் மகாவித்தியாலயத்தில் புலமைப்பரிசையில் 43 மாணவர்கள் தோற்றியிருந்தனர். இவர்களில் 05 மாணவர்கள் (147) வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றதுடன் 36 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றிருந்தனர்.
ஆலையடிவேம்பு பிரதேச கமு/திகோ/விவேகானந்தா வித்தியாலயத்தில் புலமைப்பரிசையில் 18 மாணவர்கள் தோற்றியிருந்தனர். இவர்களில் 05 மாணவர்கள் (147) வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றதுடன் 16 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றிருந்தனர்.
ஆலையடிவேம்பு பிரதேச கமு/திகோ/திருநாவுக்கரசு வித்தியாலயத்தில் புலமைப்பரிசையில் 43 மாணவர்கள் தோற்றியிருந்தனர். இவர்களில் 03 மாணவர்கள் (147) வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றதுடன் 35 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றிருந்தனர்.
இந்த பெறுபேறுகளை பெறுவதற்கு உதவிய பாடசாலை வகுப்பாசிரியர்கள், பாடசாலை அதிபர்கள் மற்றும் பாடசாலை சமூகத்திற்கு பலரும் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.