ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப்பெருவிழாவின் ஐந்தாம் நாள் சண்முகார்ச்சனை திருவிழா (படங்களும் இணைப்பு)

-சஜித்தனன்-
ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப்பெருவிழா ஆலயத்தலைவர் இ.ஜெகநாதன் தலைமையில் செவ்வாய் (2019.09.03) அன்று பூர்வாங்கக் கிரியையுடன் ஆரம்பமாகி மறுநாள் புதன்கிழமை (04.09.2019) திருக்கொடியேற்றப் பெருவிழா அன்னதான நிகழ்வு இரவுநேர திருவிழா என முதலாம் நாளுக்கான நிகழ்வுகள் இனிதே நிறைவடைந்தது.
மேலும் நேற்றய (08.09.2019) ஐந்தாம் நாளுக்கான காலை நிகழ்வு திருவிழா காலை 8.00 மணியளவில் ஆரம்பமாகி அதனைத்தொடர்ந்து அன்னதான நிகழ்வு அமரர்.மு.கந்தசாமி குருக்கள் தங்கரெத்தினம் குடும்பத்தினரினால் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
மேலும் இரவுநேர சண்முகார்ச்சனை திருவிழா மாலை 05.00 மணியளவில் திரு.க. தங்கவடிவேல்(NSB) குடும்பத்தினர் பங்களிப்புடன் இடம்பெற்று ஐந்தாம் நாளுக்கான நிகழ்வு இரவு 11.00 மணியளவில் இனிதே சிறப்பாக நிறைவடைந்தது.
ஐந்தாம் நாளுக்கான திருவிழாவில் Uduwana Ratanapala தேரர் அவர்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.