ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச தேசிய மக்கள் சக்தி ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் கண்ணகி கிராமம் பொது மயானத்தில் பாரிய சிரமதானம்….

சுற்றுப்புற சூழலை தூய்மைப்படுத்தல் மற்றும் காட்டு யானைகளில் இருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கில் கண்ணகிகிராமம் பொது மயானம் இன்றைய தினம் (01) ஆலையடிவேம்பு பிரதேச தேசிய மக்கள் சக்தி ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் கண்ணகிகிராம பொதுமக்களின் பங்களிப்புடன் கனகரக வாகனம் (JCB) டோசர்,உழவு இயந்திரம் என்பன பயன்படுத்தப்பட்டு சிரமதானம் பணி இடம்பெற்றது.
சிரமதான நிகழ்வில் பொது அமைப்புக்களின் வேண்டுகோளின் பிரகாரம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர், பொதுச் சுகாதார பரிசோதகர் மற்றும் கிராம அலுவலர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
குறித்த சிரமதானத்திற்கான கனரக வாகனத்திற்கான கொடுப்பனவு தேசிய மக்கள் சக்தியின் கௌரவ பிரதேச சபை உறுப்பினர்களின் முதலாவது மாதாந்த கொடுப்பனவிலிருந்து மேற்கொள்ளப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.