ஆலையடிவேம்பு பிரதேச சபை எல்லைக்குட்பட்டு வாழும் கால்நடை பராமரிப்பாளருக்கான இறுதி அறிவித்தல்!

பொதுப் போக்குவரத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கட்டாக்காலி மாடுகளினால் அன்றாடம் வீதி விபத்துகள் மற்றும் பொதுச் சொத்துக்கள் நாசமாக்கப்படல் மற்றும் பெறுமதியான பயிர் வகைகளும் சேதமாக்கப்படுவதாக ஆலையடிவேம்பு பிரதேச சபைக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்படுவதனால்.
இதற்கமைய ஆலையடிவேம்பு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் கட்டாக்காலியாக அலைய விடப்படும் மாடுகளை அதன் சொந்தக்காரர்கள் வீடுகளில் அல்லது பண்ணைகளில் கட்டி வைத்து பராமரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும்.
பிரதேச கால்நடை பராமரிப்பாளர்களுக்கு ஏற்கனவே இரு தடவைகள் பிரதேச சபையினூடாக அறிப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் எனவே தற்போது அறிவிக்கப்படுவது இறுதி அருவுறுத்தலாகவும் இருக்கிறது.
மீறும் கால்நடை உரிமையாளருக்கு எதிர்வரும் வாரங்களில் இருந்து எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஆலையடிவேம்பு பிரதேச சபை கௌரவ உப தவிசாளர் கணேசபிள்ளை ரகுபதி சமூக வலைதளத்தில் உரியவர்களுக்கு அறிவுறுத்தலாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
அத்துடன் கட்டாக்காலியாக பிடிக்கப்படும் மாடுகளுக்கு பிரதேச சபையினால் ஒரு மாட்டுக்கு 10,000 ரூபா தண்டப்பணமும் ஒரு நாள் பராமரிப்புச் செலவாக 2,000 ரூபாவும் அறவிடப்படும்.
அத்துடன் நீதிமன்ற அறவீடுகள் மற்றும் உரிமையாளர்கள் தங்களது மாடுகளை பெற்றுக்கொள்ளாது காலதாமதமாகும் சந்தர்ப்பத்தில் மேலதீக அறவீடுகள் பெற்றுக்கொள்ளப்படும், பிடிக்கப்படும் கட்டாக்காலி மாடுகள் தொடர்பில் உரிமையாளர்கள் மூன்று நாட்களுக்குள் தண்டப்பணத்தைச் செலுத்தி பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதுடன் தவறும் பட்சத்தில் இம்மாடுகள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு அரச உடமையாக்கி ஏலத்தில் விற்கப்படும் எனவும்.
மேலும் இந்த நாட்களுக்குள் நோய்வாய்படும் மற்றும் இறக்கும் மாடுகளுக்கு பிரதேச சபை பொறுப்பேற்காது என்பதுடன் இம் மாடுகளின் சொந்தக்காரர்கள் இருப்பின் அவர்கள் தங்களின் மாடுதான் என்பதனை உறுதிப்படுத்துவதற்காக தங்களின் பகுதி கிராம சேவகரின் உறுதிப்படுத்தலுடன் மாட்டுத் துண்டு (பண்ணைக் காட்) மற்றும் ஆள் அடையாள அட்டை என்பவற்றை ஒப்படைக்க வேண்டும்.
இது தவிர பிரதேச சபையினால் பிடிக்கப்படும் மாடுகள் (கால் நடைகள்) பிரதேச சபை சட்டத்தின் கீழ் பொலிசாரின் ஒத்துழைப்புடன் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
எனவே கால்நடை உரிமையாளர்கள் ஆலையடிவேம்பு பிரதேசசபையின் அறிவித்தலை கருத்தில் கொண்டு சிரமங்களை தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.



