ஆலையடிவேம்பு பிரதேச சபையின் 2026ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் 02 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்.

அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச சபையின் 05 ஆவது கூட்ட அமர்வு இன்று (10) பிரதேச சபையின் தவிசாளர் ஆர்.தர்மதாச தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது ஆலையடிவேம்பு பிரதேசசபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் (பட்ஜெட்) சமர்ப்பிக்கப்பட்டு வெளிப்படை வாக்கெடுப்பில் 02 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
16 உறுப்பினர்களை கொண்ட பிரதேச சபையில் தவிசாளரால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்திற்கு தமிழரசுக்கட்சியை சேர்ந்த 07 உறுப்பினர்களுடன் சுயேட்சையை சேர்ந்த 02 உறுப்பினர்கள் சேர்ந்து 09 வாக்குகள் ஆதரவாகவும் தேசியமக்கள் சக்தியின் 07 உறுப்பினர்கள் வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராகவும் வாக்களித்திருந்தார்கள்.
அந்தவகையில் 2026ஆம் ஆண்டின் வரவு செலவுத்திட்டம் 02 மேலதிக வாக்குகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சபைக்கூட்டத்தில் பிரதேச சபை உப தவிசாளர் கணேசபிள்ளை ரகுபதி உள்ளிட்ட உறுப்பினர்கள் செயலாளர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.



