ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச சபை பொது நூலகத்தில் தேசிய வாசிப்பு மாத கதை சொல்லல் நிகழ்வு…..

தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு ஆலையடிவேம்பு பொது நூலகத்தினர் ஏற்பாட்டில் “மறுமலர்ச்சிக்காக வாசிப்போம்” எனும் தொனிப்பொருளில் கதை சொல்லல் நிகழ்வு நேற்றய தினம் (07) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது.
ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் ஆ.தர்மதாச தலைமையிலும் பொது நூலகத்தின் பொறுப்பாளர் ஏற்பாட்டிலும் இடம்பெற்ற நிகழ்வில் அக்கரைப்பற்று திருவள்ளுவர் வித்தியாலயம் மற்றும் அக்கரைப்பற்று விவேகானந்தா வித்தியாலயத்தை சேர்ந்த தரம் 03 மாணவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
முன்னாள் அதிபரும் ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தின் தலைவருமான பி.தணிகாசலம் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு “மறுமலர்ச்சிக்காக வாசிப்போம்” எனும் தொனிப்பொருளில் மாணவர்கள் மத்தியில் சிறப்பாக கதை சொல்லி இருந்தார். மேலும் கலந்து கண்டிருந்த மாணவர்களும் கதைகள் சொல்லி இருந்தார்கள்.



