ஆலையடிவேம்பு
Trending
ஆலையடிவேம்பு பிரதேச சபையினர் ஏற்பாட்டில் ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் மக்கள் பயன் அடையும் நடமாடும் சேவை….

உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு ஆலையடிவேம்பு பிரதேச சபையினர் ஏற்பாட்டில் எதிர்வரும் 15.09.2025 திங்கட்கிழமை காலை 09.00 -12.00 வரை ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் நடமாடும் சேவை ஒன்று இடம்பெறவிருப்பதால் பின்வரும் விடயங்கள் தொடர்பில் பயனாளர்கள் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும்.
1.தேசிய அடையாள அட்டை தொடர்பான சேவை.
2.இறப்பு பிறப்பு அத்தாட்சிப்படுத்தல் தொடர்பான சேவை.
3.ஆலையடிவேம்பு பிரதேச மக்களுக்கான தொற்று மற்றும் தொற்றாநோய் தொடர்பிலான விழிப்புணர்வு மற்றும் இதர சேவைகள்.
4.எமது பிரதேச மக்களுக்கு ஆலையடிவேம்பு பிரதேசசபை சார்ந்து தேவையான ஏனைய சேவைகளும் அன்றைய தினம் இடம்பெறவிருக்கின்றன.
எனவே இவ் நடமாடும் சேவையினை பெற்றுக்கொள்ளவிரும்பும் பயனாளிகள் எதிர்வரும் திங்கட்கிழமை உரிய நேரத்திற்கு வருகை தருமாறு வேண்டிக்கொள்கிறார்கள்.