ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப்பெருவிழாவின் இரண்டாம் நாள் திருவிழா (படங்களும் இணைப்பு)

-அபிராஜ்,சஜித்தனன் –
ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப்பெருவிழா செவ்வாய் (2019.09.03) அன்று பூர்வாங்கக் கிரியையுடன் ஆரம்பமாகி மறுநாள் புதன்கிழமை (2019.09.04) திருக்கொடியேற்றப் பெருவிழா அன்னதான நிகழ்வு இரவுநேர திருவிழா என முதலாம் நாளுக்கான நிகழ்வுகள் இனிதே நிறைவடைந்தது.
மேலும் இரண்டாம் நாளுக்கான காலை நிகழ்வு திருவிழா இன்று காலை 8.00 மணியளவில் ஆரம்பமாகி அதனைத்தொடர்ந்து அன்னதான நிகழ்வு மேலும் இரவுநேர திருவிழா மாலை 5.30 மணியளவில் திரு.இ.ஜெகநாதன் குடும்பத்தினர் பங்களிப்புடன் இடம்பெற்று இரண்டாம் நாளுக்கான நிகழ்வு இரவு10.00 மணியளவில் இனிதே நிறைவடைந்தது.