
அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கு தகுதி பெற்ற பயனாளிகள் உதவித் தொகையை பெறுவதற்கு உடனடியாக வங்கிக் கணக்குகளை திறக்குமாறு நலன்புரி நன்மைகள் சபை கேட்டுக் கொண்டுள்ளது.
பயனாளிகளின் பட்டியல் அனைத்து பிரதேச செயலகங்களின் அறிவிப்பு பலகைகளிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம், நலன்புரி நன்மைகள் சபையின் https://wbb.gov.lk/ta/home என்ற இணையத்தளத்தின் மூலமாகவும் பார்வையிடலாம்.
‘அஸ்வெசும’ இரண்டாம் கட்டத்துக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகள், இன்னும் வங்கிக் கணக்கைத் திறக்கவில்லை என்றால், வங்கிக் கணக்கைத் திறக்க அந்தந்த பிரதேச செயலகங்களிலிருந்து கடிதத்தைப் பெறலாம் என்றும் நலன்புரி நன்மைகள் சபை குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, பயனாளிகள் வங்கிக் கணக்குகளை உடனடியாகத் திறந்து, அவர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை அந்தந்த பிரதேச செயலகங்களுக்குச் சமர்ப்பிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



