இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்றம் நடாத்திய திருநாவுக்கரசு நாயனார் குருபூசை நிகழ்வு….

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்றம் நடாத்திய திருநாவுக்கரசு நாயனார் குருபூசை நிகழ்வு இன்று (26) செவ்வாய்க்கிழமை மாலை 04.00 மணியளவில் ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்றத்தில் இடம்பெற்றது.
இன் நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், கலாசார உத்தியோகத்தர், ஆலையடிவேம்பு பிரதேச இந்து மான்றத்தின் தலைவர் திரு.வே.சந்திரசேகரம், செயலாளர் ஶ்ரீ.மணிவண்ணன், சிரேஷ்ட உறுப்பினர்கள் மற்றும் அறநெறி ஆசிரியர்கள் கலந்து சிறப்பித்ததுடன்.
இதன்போது ஆலையடிவேம்பு பிரதேச இந்து மான்ற செயலாளர் தேசமானி ஶ்ரீ.மணிவண்ணன் அவர்களால் திருநாவுக்கரசு நாயனார் பெருமைகள் பற்றிய உரை இடம்பெற்றதுடன் மேலும் ஆலையடிவேம்பு பிரதேச இந்து மான்ற தலைவர் திரு.வே.சந்திரசேகரம், ஆலையடிவேம்பு பிரதேச இந்து மான்ற சிரேஷ்ட உறுப்பினர் சுதாகரன், தன்னியச்சலம் என்பவர்களினாலும் திருநாவுக்கரசு நாயனார் பற்றிய உரைகள் இடம்பெற்றது.
மேலும் நிகழ்வுகள் ஆக திருநாவுக்கரசு நாயனாரின் தேவாரங்கள் பாடப்பட்டதுடன் பஜனை என்பனவும் இடம்பெற்று சிறப்பு பூசை என்பனவும் சிறந்தமுறையில் இடம் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.