அக்கரைப்பற்று ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய புனருத்தாபன அடிக்கல் நாட்டும் நிகழ்வு….

அக்கரைப்பற்று ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய கும்பாபிஷேக புனருத்தாபன அடிக்கல் நாட்டு நிகழ்வு இன்று (19) திங்கட்கிழமை காலை 6.15 தொடக்கம் 7.15 வரையுள்ள சுப முகூர்த்த வேளையில் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.
ஆலய தலைவர் திரு.கி.பாலதாஸன் தலைமையிலும் ஆலய நிர்வாக, ஆலோசனை சபை மற்றும் ஆலய அபிவிருத்தி குழுவினரின் பங்களிப்புடன் இடம்பெற்ற நிகழ்வில்.
அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்கிரம விசேட அதிதியாகவும், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் இராசரெத்தினம் திரவியராஜ் சிறப்பு அதிதியாகவும் மற்றும் திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் ஆகிய உயர் அதிகாரிகளும் மற்றும் ஆலய நிர்வாக, ஆலோசனை, அபிவிருத்தி குழுவினர், பக்த அடியார்கள் என பலர் இந் நிகழ்வில்கலந்து அடிக்கல் நாட்டி நிகழ்வினை சிறப்பித்தனர்.
உற்சவ நிகழ்வுகள் ஆலய குரு வே.மேகராஜா மற்றும் விசேட குரு செ.சற்குணராசா(உதயன்ஐயா) ஆகியவர்களால் கிரியைகள் இடம்பெற்றது.