திருக்கோவிலில் களைகட்டிய இந்துகலாசார திணைக்களத்தின் தெய்வீககிராம நிகழ்ச்சி..

“மக்கள் சேவையே மகேசன் சேவை” எனும் தெனிப்பொருள்ளுக்கு அமைவாக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில்.திருக்கோவில் பிரதேச செயலகம் நடாத்தும் தெய்வீக கிராம நிகழ்வு (13.03.2022) கோலாகலமாக நடைபெற்றது.
மேலும் இன்நிகழ்வில் முதல் கட்ட நிகழ்வு திருக்கோவில் தம்பிலுவில் பொது சந்தையில் அறநெறிப் பாடசாலை விழிப்புணர்வு பதாதை திரை நீக்கம். கலை கலாசார பாரம்பரிய பண்பாட்டு ஊர்வலம் ஆரம்பமாகி பிரதான வீதி ஊடக திருக்கோவில் சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தை வந்தடைந்து.
பின்னர் திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் நந்திக் கொடியேற்றம், அறநெறிக் கீதம், ஆலய வழிபாடு, நினைவுக்கல் திரைநீக்கம்,குருபூசை, கோமாதா பூசை, ஞாபகார்த்த புனித மரநடுகை, பிடியரிசி சேமிப்பு அறநெறி பாடசாலை மாணவர்களுக்காக வெளியிடப்பட்ட பாடநூல் கண்காட்சி ,மாணவர்களின் கலை நிகழ்ச்சி, அதிதிகள் கெளரவிப்பு மாணவர்களுக்கு பரிசுப்பொதி, ஆலய நிறுவாகிகள் மற்றும் அறநெறிய பாடசாலை ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்குதல் ஆகிய நிகழ்வுகள் திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் அலங்கரிக்கப்பட வளாகத்தில் மிகச்சிறப்பாக இடம்பெற்றது.
மேலும் இன் நிகழ்வில் விசேட அதிதியாக சிவஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா.(பிரதமரும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சருமாகிய கௌரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்களது இந்து மத விவகாரங்களுக்கான இணைப்பாளர் கலந்து சிறப்பித்தார்.
மேலும் ஆன்மீக அதிதிகளாக சிவஸ்ரீ நீ. அங்குசநாத குருக்கள்(ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயம், திருக்கோவில்), சிவஸ்ரீ ந. பத்மலோஜன் சர்மா (ஸ்ரீ விஷ்னு தேவஸ்தானம், பெரியநீலாவணை)
மேலும் இந் நிகழ்வில் பிரதம அதிதியாக திரு. ஜே.எம்.ஏ.டக்லஸ் (அரசாங்க அதிபர் மாவட்டச் செயலகம்,அம்பாறை) மற்றும் கௌரவ அதிதி திரு.வே.ஜெகதீஸன்
(மேலதிக அரசாங்க அதிபர் மாவட்டச் செயலகம், அம்பாறை), சிறப்பு அதிதிகளாக திருக்கோவில் பிரதேச செயலாளர் திரு.த.கஜேந்திரன் (திருக்கோவில் பிரதேச செயலகம்), திரு.சி.ஜெகராஜன்
(பிரதேச செயலாளர், காரைதீவு), திரு.சோ.ரங்கநாதன் (பிரதேச செயலாளர், நாவிதன்வெளி)
திரு.ரி.ஜே.அதிசயராஜ் (பிரதேச செயலாளர்,கல்முனை வடக்கு.) திரு.வி.பவாகரன் (பிரதேச செயலாளர், ஆலையடிவேம்பு) திரு.ந.நவனீதராஜா (பிரதேச செயலாளர், லாகுல ஆகியோரும் மாவட்ட மற்றும் பிரதேச இந்துகலாசார உத்தியோகத்தர்களும் இன் நிகழ்வில் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.
மேலும் இன் நிகழ்வானது சுகாதார வழிமுறைகளை பின்பற்றலுடன் இடம்பெற்றது.
ஜே.கே.யதுர்சன்