அக்கரைப்பற்று, ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் 73 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பு! கௌரவிப்பு நிகழ்வு….

அக்கரைப்பற்று திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் அனைத்து துறைகளிலிருந்தும் 73 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லும் தகைமை பெற்றுள்ளதோடு 05 மாணவர்கள் மருத்துவ துறைக்கு தெரிவாகியுள்ளனர்.
அது மட்டுமில்லாமல் மருத்துவதுறையில் மாவட்ட நிலை – 01 ஐயும் இதேபோல் வர்த்தக பிரிவிலும் மாவட்ட நிலை – 03, 08 ஆகியவற்றையும் பெற்றுக்கொண்டனர்.
இவ் வகையில் திருக்கோவில் கல்வி வலயம் மாகாணத்தில் 03 ஆம் இடத்தையும் மாவட்ட அடிப்படையில் 01 ஆம் இடத்தையும் முன்னோக்கி நகர முடிந்துள்ளது.
இந்த நிலையில் இன்றைய தினம் (06) அக்கரைப்பற்று, ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் ஜே. ஆர்.டேவிட் அமிர்தலிங்கம் தலைமையில் நடைபெற்றதுடன்.
இதனுடன் குறித்த மாணவர்களை கற்பித்து உயர்ந்த நிலையை அடையசெய்த ஆசிரியர்கள் மற்றும் பாடசாலையின் உதவி அதிபர், பிரதி அதிபர், அதிபர் மேலும் ஆலையடிவேம்பு கோட்டக்கல்வி பணிப்பாளர் சோ.செல்வம், கல்விக்கு பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் A.M.நௌபர்டீன் மற்றும் திருக்கோவில் வலயக்கல்வி பணிப்பாளர் இரா.உதயகுமார் ஆகியவர்களும் பாடசாலையின் அபிவிருத்தி சங்கத்தினரால் வாழ்த்தி கௌரவிக்கப்பட்டிருந்தனர்.



