ஆலையடிவேம்பு

அக்கரைப்பற்று, விபுலானந்தா பாலர் பாடசாலையின் புதிய மாணவர்களை வரவேற்றலும் பொங்கல் விழாவும்…..

அக்கரைப்பற்று விபுலானந்தா பாலர் பாடசாலையின் புதிய மாணவர்களை வரவேற்றலும் பொங்கல் நிகழ்வும் இன்று (13) காலை இடம்பெற்றது.

அக்கரைப்பற்று விபுலானந்தா இல்ல தலைவரும் இந்து இளைஞர் மன்றத்தின் தலைவருமான இறைபணிச் செம்மல் த.கயிலாயபிள்ளை தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அதிதிகள் மற்றும் இந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் பாலர் பாடசாலையின் ஆசிரியர் மாணவர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

பூஜை வழிபாடுகளுடன் ஆரம்பமான நிகழ்வில் அதிதிகள் வரவேற்கப்பட்டதுடன் பாலர் பாடசாலையில் இணைந்து கொள்ளும் புதிய மாணவர்களை சிரேஸ்ட மாணவர்கள் மாலை அணிவித்து வரவேற்றனர்.

பின்னர் ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளில் மாணவர்களின் கலை கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றது.

கடந்த 34 வருடங்களாக விபுலானந்தா பாலர் பாடசாலை அக்கரைப்பற்று பிரதேசத்தில் இயங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

செய்தி: கஜிதன்

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker