அக்கரைப்பற்று சுவாமி விபுலானந்தா பாலர் பாடசாலையின் விடுகை விழா 2025: இந்து இளைஞர் மன்ற கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

– ஜினுஜன், சுஜோ –
அக்கரைப்பற்று, சுவாமி விபுலானந்தா பாலர் பாடசாலையின் விடுகை விழா நிகழ்வு இன்று (23) காலை 9.30 மணியளவில் இந்து இளைஞர் மன்ற கேட்போர் கூடத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
சுவாமி விபுலானந்தா பாலர் பாடசாலையின் பணிப்பாளர் மாற்றம் இந்து இளைஞர் மன்றத்தின் தலைவர் இறைபணிச்செம்மல் த.கயிலாயபிள்ளை தலைமையிலும் இந்து இளைஞர் மன்றத்தினர் மற்றும் சுவாமி விபுலானந்தா பாலர் பாடசாலை ஆசிரியர்கள் ஒருங்கிணைப்புடன் இடம்பெற்ற நிகழ்வில்.
அதிதிகள் மாலையிட்டு வரவேற்கப்பட்டு மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமான குறித்த நிகழ்வுகளில் சிறார்களின் நடனங்கள், பேச்சுக்கள், மேடை நாடகங்கள் என பல கலை நிகழ்வுகள் மேடையேற்றப்பட்டதுடன் அதிதிகள் உரைகள் மாணவர்களுக்கான நினைவுச்சின்னம் மற்றும் பரிசு வழங்குதல் நிகழ்வுகள் என்பனவும் இடம்பெற்றது.
நிகழ்வில் பிரதேசத் தலைமை அதிதியாக ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் A.தர்மதாச, விடையதான தலைமையாக அம்பாறை மாவட்ட கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியக தவிசாளர் ஜனாப்.அமிர்தீன் அவர்களும்.
கனம் தரும் அதிதிகளாக W.G.திசாநாயக்க கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயாலாளர், ஜனாப் MBM.சுப்ரியான் ஆணையானர் சிறுவர் நன்னடத்தைத் திணைக்களம் திருகோணமலை, திருவாளர் S.கரன் கிழக்கு மாகாண சுகாதர அமைச்சின் சிரேஷ்ட உதவி செயளாலர் ஆகியவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
மற்றும் சிறப்பிக்கும் அதிதிகள் கௌரவந்தரும் அதிதிகள் என பலரும் மேலும் பாலர் பாடசாலை மாணவர்கள், பெற்றார்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.



