ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று – சாகாம வீதி வழியாக பயணம் மேற்கொள்ளும் போது அவதானமாக செல்லுங்கள்!

ஆலையடிவேம்பு பிரதேச செயலக முன் வீதியில் காணப்படும் வடிகானுடன் பிரதேச செயலகத்திற்கு முன்னால் தற்போது அமைக்கப்பட்டு வரும் வடிகான் தொகுதியை இணைத்து நீர் வடிந்து செல்ல வேண்டும் எனும் நோக்குடன் அந்த பகுதியில் சாகாம பிரதான வீதியின் ஒரு பகுதி தோண்டப்பட்டு பிரதேசத்தின் நன்மைக்காக அபிவிருத்தி வேலைகள் இடம்பெற்று வருகின்றது.
இதன் காரணமாக குறித்த அந்த இடத்தில் வீதியில் ஒரு பக்கம் ஊடக மாத்திரம் பயணம் மேற்கொள்ளக்கூடிய ஏற்பாடுகளை செய்திருக்கின்றார்கள். மேலும் சிறந்த முறையில் அடையாள பலகைகள் (Sign Boards) மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி இருக்கிறார்கள்.
இருந்தும் தற்போது மழைக்காலம் என்பதாலும் மேலும் இரவு நேரங்களிலும் குறித்த பகுதியூடாக பயணங்கள் மேற்கொள்ளும் போது வாகனங்களின் வேகத்தை குறைத்தும் அவதானமாகவும் பயணங்களை மேற்கொள்வது பாதுகாப்பாக இருக்கும்.



