ஆலையடிவேம்பு
Trending
அக்கரைப்பற்று கண்ணகி கிராமம் முருகன்மலை அருள்மிகு ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த பிரமோற்சவப் பெருவிழாவின் 03 ஆம் நாள் திருவிழா….

அக்கரைப்பற்று கண்ணகி கிராமம் முருகன்மலை அருள்மிகு ஸ்ரீ முருகன் ஆலய ஆவணி பௌர்ணமி வேல்விழா உற்சவம் கடந்த 02 ஆம் திகதி ஆரம்பமாகி தொடர்ந்தும் நாளாந்த திருவிழாக்கள் இடம்பெற்று வருகிறது.
அந்த வகையில் நேற்றய தினம் (05.09.2025) 03 ஆம் நாள் இரவு நேர திருவிழா பக்த அடியார்கள் சூழ சிறப்பாக இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து ஆலய வளாகத்தில் கண்ணகி தமிழ் இசை கலாமன்றத்தினர் நடாத்திய சிறப்பு கலை நிகழ்வு கோலாகலமாக இடம்பெற்றது.
நாளைய தினம் இடம்பெறும் தீர்த்த உற்சவத்துடன் ஆவணி பௌர்ணமி வேல்விழா நிறைவுறவுள்ளது.