அக்கரைப்பற்று, இராம கிருஷ்ண மிஷன் மகா வித்தியாலய மாணவர்களுக்கு அம்பாறை இளங்கலைமானிகள் சங்கத்தினர் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு செயலமர்வு…..

அக்கரைப்பற்று, இராம கிருஷ்ண மிஷன் மகா வித்தியாலய மாணவர்களுக்கு அம்பாறை இளங்கலைமானிகள் சங்கத்தினர் (Undergraduates Association – Ampara) ஏற்பாட்டில் “மாணவர்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு சம்பந்தமான விழிப்புணர்வை சமூகத்தில் மாணவர் மட்டத்திலிருந்தே ஆரம்பித்து, எதிர்கால சந்ததியினரை சீர்கேடுகளிலிருந்து பாதுகாத்தல்” எனும் தலைப்பில் விழிப்புணர்வு விழிப்புணர்வு செயலமர்வு ஒழுங்கு செய்யப்பட்டு இன்று (28) சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு வளவாளராக பிரதேசத்தின் சமூக ஆர்வலரும் பிரசித்தி பெற்ற சட்டத்தரணியுமான K.ஜெகசுதன் கலந்து கொண்டிருந்ததுடன்.
மாணவர்களுக்கு போதைப்பொருளின் தீமைகள் சமூகத்தில் அதனால் ஏற்படும் பாதிப்புகள் அதனைத் தடுக்கும் சட்டரீதியான வழிமுறைகள் குறித்து தெளிவுபடுத்தி நடைமுறை உதாரணங்களின் மூலமும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
மேலும் நிகழ்ச்சியின் இறுதியில் மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு விரிவான பதில்களையும் வழங்கி மாணவர்களின் விழிப்புணர்வு மேன்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்வு மாணவர்களின் மனங்களில் போதைப்பொருள் ஒழிப்பை நோக்கிய உறுதியான எண்ணங்களை விதைத்ததோடு, சமூகத்தில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தும் வழிவகுப்பாக அமைந்தது.