பிரித்தானியா சைவத்திருக்கோவில் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஆலையடிவேம்பின் சில பகுதி குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைப்பு.

வி.சுகிர்தகுமார்
நாவிதன்வெளி காரைதீவு சம்மாந்துறை ஆலையடிவேம்பு பொத்துவில் ஆகிய பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரிவுகளில் உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
ஒன்றியத்தின் இணைப்பாளரும் பல கண்டுபிடிப்புக்களை கண்டு பிடித்து இளம் விஞ்ஞானி என பெயர் பெற்று நம் நாட்டிற்கு பெயர் சேர்த்த சோ.வினோஜ்குமார் தலைமையில் இடம்பெற்ற நிவாரணப்பணிகளில் அரச அதிகாரிகள் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட நாவற்காடு மற்றும் அக்கரைப்பற்று 7/1 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் இடம்பெற்ற நிவாரணப்பணியில் பிரதேச செயலாளர் கே.லவநாதன் மற்றும் சிரேஸ்ட ஊடகவியலாளர் வீ.ரி.சகாதேவராஜா சம்மாந்துறை கோரைக்கர் ஆலய தலைவர் க.மோகன் பல்கலைக்கழக ஒன்றியத்தலைவர் சோ.தினேஸ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இங்கு கருத்து தெரிவித்த சிரேஸ்ட ஊடகவிலாளர் வீ.ரி.சகாதேவராஜா நாட்டில் உள்ள இக்கட்டான இச்சூழலில் வாழ்வாதரத்தை இழந்து மக்களுக்காக பிரித்தானியா சைவத்திருக்கோவில் ஒன்றியம் மேற்கொண்டுவரும் பணியை பாராட்டியதுடன் இதற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
அம்பாரை மாவட்டத்தில் பிரித்தானியா சைவத்திருக்கோவில் ஒன்றியம் மகத்தான பணிகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.