மகாசக்தி பாலர் பாடசாலை மாணவர்களின் வருடாந்த விடுகை விழா….

ஆலையடிவேம்பு மகாசக்தி பாலர் பாடசாலை மாணவர்களுக்கான விடுகை விழா நேற்று (02) மகாசக்தி கேட்போர் கூட மண்டபத்தில் மகாசக்தி நிர்வாகத்தினர் தலைமையிலும் பாலர் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் பங்களிப்புடனும் இடம்பெற்றிருந்தது.
நிகழ்வில் அதிதிகளாக க.தர்ஷினி தலைவி மகாசக்தி சி.க.கூ.சங்கம், ச.திலகராஜன் செயலாளர் /முகாமையாளர் மகாசக்தி சி.க.கூ.சங்கம், கீ.கமலமோகனதாசன் பிரதிக் கல்விப் பணிப்பாளர் (பாடசாலை நிருவாகப் பிரிவு) மற்றும் ஆலையடிவேம்பு கோட்டக்கல்வி பணிப்பாளர்,MA சிதி இரஃபான முன்பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரதேசசெயலகம் ஆலையடிவேம்பு என பலர் கலந்து நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.
ஆலையடிவேம்பு பிரதேசத்துக்குட்பட்ட மகாசக்தி நாவற்காடு பாலர் பாடசாலை, கண்ணகி கிராம பாலர் பாடசாலை மற்றும் மகாசக்தி டயகோனியா பாலர் பாடசாலை என 03 பாடசாலை சிறார்கள் இணைந்து இந் நிகழ்வில் கலந்து கொண்டதுடன்.
பாலர் பாடசாலை மாணவர்களின் கலை கலாச்சார நிகழ்வுகளும் குறித்த மாணவர்களுக்கான நினைவுச்சின்னம் மற்றும் பரிசளிப்பு வழங்குதல் நிகழ்வுகளும் இடம்பெற்றது.



