பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்ட சென்ற அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர்

வி.சுகிர்தகுமார்
லாகுகல பிரதேச செயலாளர் அனுருத்த பியதாச சந்துருவனின் அழைப்பின்பேரில் அங்கு சென்ற அவர்கள் பிரதேச செயலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட உலர் உணவுப்பொதிகளையும் வழங்கி வைத்தனர்.
கொரோனா தொற்று நோய் அச்சத்தினால் தொழிலுக்கு செல்லமுடியாத அன்றாடம் தொழில் புரியும் வருமானம் குறைந்த மக்கள் பெரிதும் இப்பிரதேசத்தில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தனர்.
அத்தோடு சேனைப்பயிர்ச் செய்கை மற்றும் விவசாயிகளும் யானைகளின் அச்சுறுத்தலால் தமது தொழிலை மேற்கொள்ள முடியாமல் அவதியுறுகின்றனர்.
இவற்றை நேரடியாக சென்று பார்வையிட்ட அரச அதிபர் அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதற்கான தகவல்களை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கினார்.
மேலும் யானையின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட வீடுகளையும் பயிர்ச் செய்கையினையும் பார்வையிட்டதுடன் உடைந்து விழும் நிலையில் உள்ள குடியிருப்புக்களின் நிலைமையினையும் கண்டறிந்து கொண்டார்.
இதேநேரம் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவுப்பொதிகளையும் வழங்கி வைத்தனர்.









