இலங்கை
நட்டத்தில் இருந்து சதொசவை மீட்டெடுத்த ஊழியர்களுக்கு “போனஸ்”

தொடர்ந்து இரண்டு வருடங்களாக நட்டத்தில் இயங்கிய சதொச நிறுவனம் இந்த வருடம் 100 மில்லியனுக்கும் அதிகமான இலாபத்தை ஈட்டியுள்ளது.
அதனால் இந்த டிசம்பர் மாதத்தில் அனைத்து ச.தொ.ச ஊழியர்களுக்கும் தலா 28,500 வீதம் மேலதிக கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஒரு நிறுவனம் இலாபம் ஈட்டும் போது அதன் இலாபத்தில் ஒரு பகுதியையாவது அதன் ஊழியர்களுக்கு ஒதுக்குவதை உறுதிப்படுத்துமாறு வர்த்தக அமைச்சர் நிறுவனங்களின் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று (24) நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.