கோளாவில் விநாயகர் மகா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டு போட்டி விழா! கலைமகள் இல்லம் முதலிடம்….

திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட ஆலையடிவேம்பு கோட்ட கமு/திகோ/கோளாவில் விநாயகர் மகா வித்தியாலயத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான இல்ல விளையாட்டு போட்டி விழாவின் இறுதி நாள் நிகழ்வு நேற்று (11) பி.ப 2.30 மணியளவில் பாடசாலை மைதானத்தில் கோலாகலமாக இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் த.இராசநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த விளையாட்டு போட்டியின் ஆரம்ப நிகழ்வில் அதிதிகள் மாணவர்களால் மாலை அணிவிக்கப்பட்டு பேண்ட் வாத்திய கருவிகள் இசைத்து வரவேற்கப்பட்ட பின்னர், தேசிய கொடி, பாடசாலை கொடி மற்றும் இல்ல கொடிகள் ஏற்றி தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து ஒலிம்பிக் சுடரேற்றி மாணவர்களின் சத்தியபிரமாண நிகழ்வுடன் விளையாட்டுகள் ஆரம்பமானது.
பாடசாலையின் இல்ல அணிகளான கலைமகள் இல்லம், திருமகள் இல்லம், மலைமகள் இல்லம் ஆகிய அணி மாணவர்களுக்கு இடையில் விளையாட்டு போட்டிகள் என்பனவும் இடம்பெற்று இருந்தது.
நிகழ்வில் பிரதம அதிதியாக ஆசிரியர் வாண்மை விருத்தி முகாமையாளர் ந.சுதாகரன் மற்றும் மேலும் பல அதிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.
கலந்துகொண்டிருந்த அதிதிகளால் முதலாம் இடம் பெற்ற கலைமகள் இல்லம், இரண்டாம் இடம்பெற்ற திருமகள் இல்லம் மற்றும் மூன்றாம் இடம்பெற்ற மலைமகள் இல்லம் ஆகிய அணிகளுக்கு வெற்றி கிண்ணங்கள் மற்றும் அதிக திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு சாம்பியன் கிண்ணங்கள் என்பனவும் வழங்கிவைக்கப்பட்டது.



