இலங்கை
Trending

கடந்த இரு ஆண்டுகளில் பாடசாலை கல்வியை இடைநிறுத்திய ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள்!

2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பாடசாலை கல்வியை பாதியில் கைவிட்டனர் என்று தொழிற் கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹெவாகே தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (18) நாடாளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மேலும் உரையாற்றுய அவர்,

2024-ஆம் ஆண்டில் அடையாளம் காணப்பட்ட பாடசாலைக்குச் செல்லாத சிறுவர்களின் எண்ணிக்கை 711 ஆகவும், 2025-ஆம் ஆண்டில் 885 ஆகவும் இருந்தது.

பாடசாலையில் சேர்க்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை 570 (280 சிறுமிகள், 290 சிறுவர்கள்) 2025-ஆம் ஆண்டில் சேர்க்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை 777 (384 சிறுமிகள், 393 சிறுவர்கள்) ஆவர்.

2024-ஆம் ஆண்டில், பாடசாலைகளில் சேராத சிறுமிகளின் எண்ணிக்கை 10 ஆகவும், சிறுவர்களின் எண்ணிக்கை 18 ஆகவும் இருந்தது.

2025 ஆம் ஆண்டில், இந்த எண்ணிக்கை 11 சிறுமிகள் மற்றும் 23 சிறுவர்களாக இருந்தது.

2024 ஆம் ஆண்டில் பாடசாலையிலிருந்து விலகிய மாணவர்களின் எண்ணிக்கை 597 ஆகவும், 2025-ல் 301 ஆகவும் இருந்தது.

2024-ல் மீண்டும் பாடசாலையில் சேர்க்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை 309 ஆகவும், 2025-ல் 210 ஆகவும் இருந்தது.

2024 இல் பாடசாலையில் சேராத சிறுவர்களின் எண்ணிக்கை 47 ஆகவும், 2025 இல் 91 ஆகவும் இருந்தது – என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker