இலங்கை
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்: ஹக்கீம், ரிஷாட்டிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ள சி.ஐ.டி. நடவடிக்கை

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் ரிஷாட் பதியுதீன் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோரிடம் வாக்குமூலத்தை பெற்றுக்கொள்ள குற்றப் புலனாய்வு பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரிடமிருந்தும் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்கு சி.ஐ.டி. கோரியுள்ளது.
இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நீதிமன்ற அமர்வின்போது கொழும்பு மேலதிக நீதவான் லங்கா ஜயரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை நத்தார் பண்டிகைக்கு பின்னர் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்திடமிருந்தும் வாக்குமூலத்தை பதிவு செய்யப்பட வேண்டும் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



