ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச மக்களால் பாராட்டி கெளரவிக்கப்பட்ட ZEE தமிழ் ச ரி க ம ப “சபேசன்”

ZEE தமிழ் நடாத்தும் ச ரி க ம ப போட்டியில் எமது நாட்டின் சார்பாக கலந்து கொண்டு வெற்றியாளருக்கு சமமான இரண்டாவது வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்ட எமது கிழக்கில் மைந்தன் சபேசனை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு நேற்று (11) அக்கரைப்பற்று மண்ணில் இடம் பெற்றது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் உள்ள சமூக அமைப்புக்களில் ஒத்துழைப்புடன் குறித்த நிகழ்வு இடம் பெற்றது.
இதன் போது அக்கரைப்பற்று மருதடி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் இடம் பெற்ற சிறப்பு வழிபாடுகளை தொடர்ந்து சாகாமம் பிரதான வீதி ஊடாக ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட சபேசனை ஆலையடிவேம்பு பிரதேச மக்கள் மகிழ்ச்சியாக வரவேற்றனர்.
இதனை தொடர்ந்து அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச செயலக மண்டபத்தில் கலை நிகழ்வுகளுடன் கூடிய பாராட்டு நிகழ்வுகளும் இடம் பெற்றது.



