ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் சமூர்த்தி அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் சிரமதானப் பணி பிரதேச செயலாளர் அவர்களின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுப்பு


ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் சமூர்த்தி அபிவிருத்தி பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிரமதான பணியானது பிரதேச செயலாளர் அவர்களின் வழிகாட்டலின் கீழ் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.டி.எம்.சமந்த திஸ்ஸாநாயக்க அவர்களின் தலைமையில் அக்கரைப்பற்று-7/4 கிராம சேவகர் பிரிவில் நேற்று (01.10.2021) நடைபெற்றது.
இந்நிகழ்வில் சமூர்த்தி தலைமைபீட முகாமையாளர், பிரதேச செயலக கணக்காளர், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் சமுர்த்தி சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
சிறுவர் தினத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த சிரமதானப் பணியில் அக்கரைப்பற்று −7/4 கிராம சேவகர் பிரிவிலுள்ள வீரமாகாளி கோயில் வீதி வடிகான், கலாச்சார மண்டப வீதி வடிகான் மற்றும் கனகர் வீதி வடிகான் என்பன துப்பரவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
நன்றி: Divisional Secretariat, Alayadivembu முகநூல் பக்கம்






