விளையாட்டு
Trending

அதிக ஓட்டங்கள் கொண்ட போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அதிக ஓட்ட எண்ணிக்கைகள் பதிவான 2026 டி20 உலகக் கிண்ணத்தின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி ஏழு ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.

இந்த முடிவு ஞாயிற்றுக்கிழமை (08) அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து டி20 உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு வழிவகுத்தது.

10 சர்வதேச டி20 உலகக் கிண்ணப் போட்டிகளில் இந்தியா பங்கேற்கும் நான்காவது இறுதிப் போட்டி இதுவாகும்.

2007 ஆம் ஆண்டு தொடக்க டி20 உலகக் கிண்ணத்தின் இறுதிப் போட்டியிலும், 2024 ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற டி:20 உலக்க் கிண்ண இறுதிப் போட்டியிலும் இந்தியா கிண்ணங்களை வென்றிருந்தது.

அதேநேரத்தில், 2014 ஆம் ஆண்டு இலங்கையுடான இறுதிப் போட்டியில் தோல்வியைத் தழுவியது.

நேற்றிரவு 07.00 மணிக்கு ஆரம்பமான 2026 ஆடவர் டி:20 உலகக் கிண்ணத்தின் இரண்டாவது அரையிதி ஆட்டத்தில் சஞ்சு சாம்சனின் அபாரமான 89 ஓட்டங்கள் மற்றும் நடுத்தர துடுப்பாட்டத்தில் இருந்து வந்த தொடர்ச்சியான அதிரடி ஆட்டங்களால் இந்தியா 253/7 என்ற மகத்தான ஓட்ட எண்ணிக்கையை குவித்தது.

இது டி20 உலகக் கிண்ண நாக் அவுட் போட்டியில் ஒரு அணியின் அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கை ஆகும்.

இன்னிங்ஸில் சஞ்சு சாம்சன் தவிர  சிவம் டூபே 43 ஓட்டங்களையும் இஷான் கிஷான் 39 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றுக் கொண்டனர்.

பின்னர் கடினமான சேஸிங்கில் ஜேக்கப் பெத்தேல் 48 பந்துகளில் 105 ஓட்டங்கள் எடுத்ததால் ஈர்க்கப்பட்ட இங்கிலாந்து, வீரம் மிக்க போராட்டத்தை வெளிப்படுத்தியது.

எனினும், இரண்டு முறை சாம்பியனான அவர்களால் 20 ஓவர்களில் 246/7 ஓட்டங்கள் மாத்திரமே எடுக்க முடிந்தது.

இந்திய பந்து வீச்சாளர்களில் ஜஸ்பிரித் பும்ரா சிறந்த பந்து வீச்சாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், நான்கு ஓவர்களில் 33 ஓட்டங்களை வழங்கி ஒரு விக்கெட்டை எடுத்தார்.

டி20 உலகக் கிண்ணத்தில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது தொடர்ச்சியான அரையிறுதி ஆட்டம் இதுவாகும்.

2022 அரையிறுதியில் இங்கிலாந்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

அதே நேரத்தில் 2024 ஆம் இந்தியா 68 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker