அக்கரைப்பற்று, விவேகானந்தா வித்தியாலயத்தில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கான கௌரவிப்பும் பிரியாவிடை நிகழ்வும்.

ஆலையடிவேம்பு கல்விக்கோட்ட கமு/திகோ/விவேகானந்தா வித்தியாலயத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்றய தினம் (08) பாடசாலையின் அதிபர் க.ஜனார்த்தனன் தலைமையில் கோலாகலமாக பாடசாலை ஆராதனை மண்டபத்தில் இடம்பெற்றது.
இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக இரா.உதயகுமார் (வலயக்கல்வி பணிப்பாளர், திருக்கோவில்) ,மரியாதைக்குரிய விருந்தினர்களாக N.ரேகன் (தேர்தல் உதவி ஆணையாளர், மட்டக்களப்பு மாவட்டம்)
A.M.நௌபர்டீன், S.செல்வம் மேலும் சிறப்பு விருந்தினராக S.சபேசன் (சரிகமப புகழ்) அவர்களும் நிகழ்வை கலந்து சிறப்பித்திருந்தார்கள்.
நிகழ்வு தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய மாணவர்களை கௌரவித்து நினைவு பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டதுடன்.
பெற்றோர்களால் மாணவர்களை கற்பித்த ஆசிரியர்கள் பாடசாலையின் அதிபர் ஆகியவர்களும் கௌரவப் படுத்தப்பட்டிருந்தனர்.
மேலும் சரிகமப புகழ் சபேசன் அவர்களுக்கான கௌரவிப்பும், பிரதேசத்தில் சமூக செயற்பாடுகள் மேற்கொண்டவர்களுக்கான கௌரவிப்புக்களும் இடம்பெற்றிருந்தன.



