ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று, இயேசு ஜீவிக்கிறார் திருச்சவையின் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பை நினைவு கூரும் உயிர்த்த ஞாயிறு பாதயாத்திரை.

இயேசு கிறிஸ்து மரணத்தை வென்று உயிர்த்தெழுந்ததை நினைவு கூறும் வகையில் கிருஸ்தவ மக்கள் நாடு பூராகவும் உயிர்த்த ஞாயிறு மிகுந்த பக்தியுடன் கொண்டாடப்பட்டு வருகின்ற இன்றைய தினம்.
அக்கரைப்பற்று, இயேசு ஜீவிக்கிறார் திருச்சவையின் உயிர்த்த ஞாயிறு பாதயாத்திரை இன்றைய தினம் (05) காலை 7.30 மணியளவில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் முன்பாக ஆரம்பமாகி பழைய வைத்தியசாலை வீதி ஊடக அக்கரைப்பற்று 09 ஆம் பிரிவில் அமைந்திருக்கும் அக்கரைப்பற்று, இயேசு ஜீவிக்கிறார் சுவிசேஷ பணிமனையை வந்தடைந்து.
அங்கு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு விசேட ஆராதனை வழிபாடுகளுடன் நிறைவடைந்தது. இதனில் ஒய்வு நாள் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்குகொண்டிருந்தனர்.



