இலங்கை
முத்தமிழ் வித்தகர் ஶ்ரீமத் சுவாமி விபுலாநந்தரின் 74 வது சிரார்த்த தின நிகழ்வு காரைதீவில் இன்று…

முத்தமிழ் வித்தகர் ஶ்ரீமத் சுவாமி விபுலாநந்தரின் 74 வது சிரார்த்த தின நிகழ்வானது இன்று (19.07.2021) திங்கட்கிழமை காலை 7.00 மணிக்கு சுவாமி பிறந்த இல்லத்தில் மன்றத்தின் முன்னால் தலைவர் திரு V.T. சகாதேவராஜா தலமையில் இடம்பெற்றதுடன்.
இந்நிகழ்வில் மன்ற உறுப்பினர்கள் அறங்காவலா் ஒன்றிய தலைவர் திரு இரா. குணசிங்கம் செயலாளர் திரு எஸ். நந்தேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டதுடன் மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் மேலாளர் ஶ்ரீமத் சுவாமி தக்ஷாஜானந்த ஜீ அவர்களினால் மன்ற நூலகத்திற்காக ஆன்மீக நூல் தொகுதியும் , புத்தக அலுமாரியும் வழங்கி வைக்கப்பட்டன இந்நிகழ்வு சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இடம்பெற்றது.