முதன்மையான கால்பந்து லீக் தொடர்களின் முக்கியமான போட்டிகளின் முடிவுகள்!

உலகில் அதிக இரசிகர்கள் வட்டாரங்களை கொண்டுள்ள கால்பந்து விளையாட்டினை, மேலும் மெரூகூட்டும் விதமாக கால்பந்து துறையில் ஆதிக்கம் செலுத்தும் நாடுகள், தனித்துவமாக கால்பந்து லீக் தொடர்களை நடத்தி வருகின்றன.

இதில், ஸ்பெயினில் ‘லா லிகா’, இத்தாலியில் ‘செர்ரி ஏ’, இங்கிலாந்தில் ‘இங்லீஷ் பிரீமியர் லீக்’, ஜேர்மனியில் ‘புண்டர்ஸ்லிகா’, பிரான்ஸில் ‘லீக்-1’ ஆகிய கால்பந்து தொடர்கள் முன்னிலை பெறுகின்றன.
இதற்கமைய தற்போது இத்தொடர்களின் 2019-2020 ஆண்டுக்கான பருவக் கால தொடர் நடைபெற்று வருகின்றது.
இதில் ஸ்பெயினில் நடைபெற்றுவரும் லா லிகா கால்பந்து தொடரின் 30ஆவது கட்டப் போட்டிகளின் முடிவுகளை பார்க்கலாம்,
முனிசிபல் டி இபுருவா விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியொன்றில், அத்லெடிக்கோ மெட்ரிட் அணியும், ஈபார் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
இரசிகர்களுக்கு உச்ச விறுவிறுப்பை பரிசளித்த இப்போட்டியில், ஈபார் அணி 2-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்று, அத்லெடிக்கோ மெட்ரிட் அணிக்கு அதிர்ச்சி கொடுத்தது.
இதன்போது, ஈபார் அணி சார்பில், எஸ்டீபன் பர்கோஸ் 10ஆவது நிமிடத்தில் ஒரு கோலும், எடு எக்ஸ்போசிட்டோ 90ஆவது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்தனர்.
…………
கேம்ப் நவ் விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியொன்றில், பார்சிலோனா அணியும், கிரெனடா அணியும் பலப்பரீட்சை நடத்தின.
விறுவிறுப்பாக நகர்ந்த இப்போட்டியில், பார்சிலோனா அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
இதில் பார்சிலோனா அணி சார்பில், லியோனல் மெஸ்ஸி 76ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
அடுத்ததாக இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் இங்கிலீஷ் பிரிமியர் லீக் கால்பந்து தொடரின், 23ஆவது கட்டப் போட்டிகளின் முடிவுகளை பார்க்கலாம்.
டர்ப் மூர் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், பேர்ன்லி அணியும், லெய்ஸ்டர் அணியும் மோதின.
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், பேர்ன்லி அணி 2-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.
இதில் பேர்ன்லி அணி சார்பில், கிறிஸ் வுட் 56ஆவது நிமிடத்தில் ஒரு கோலும், ஆஷ்லி வெஸ்ட்வுட் 79ஆவது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்தனர்.
லெய்ஸ்டர் அணி சார்பில், ஹார்வீ பார்னஸ் 33ஆவது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்தனர்.
…………
என் பீல்ட் மைதானத்தில் நடைபெற்ற இன்னொரு போட்டியொன்றில். மன்செஸ்டர் யுனைடெட் அணியும், லிவர்பூல் அணியும் மோதின.
இரசிகர்களின் உச்சக்கட்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில், லிவர்பூல் அணி2-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.
இதில் லிவர்பூல் அணி சார்பில், விர்ஜிர் வென் டிஜ்க் 14ஆவது நிமிடத்தில் ஒரு கோலும், மொஹமட் சலா 93ஆவது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்தனர்.
……….
அடுத்ததாக இத்தாலியில் நடைபெறும் செர்ரி ஏ கால்பந்து லிக் தொடரின் 20ஆவது கட்ட லீக் போட்டிகளின் முடிவுகளை பார்க்கலாம்,
சேன் சிரோ விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற போட்டியொன்றில், மிலான் அணியும், உடினீஸ் அணியும் மோதின.
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், மிலான் அணி 3-2 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.
இதில் மிலான் அணி சார்பில், என்டீ ரெபீக் 48ஆவது மற்றும் 93ஆவது நிமிடங்களில் என இரண்டு கோல்களும், தியோ ஹெர்னான்டஸ் 71ஆவது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்தனர்.
உடினீஸ் அணி சார்பில், ஜென்ஸ் ஸ்ட்ரைஜர் லார்சன் 6ஆவது நிமிடத்தில் ஒரு கோலும், கெவின் லாசக்னா 85ஆவது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்தனர்.
………..
டெல் மரே விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற போட்டியொன்றில், இன்டர் மிலான் அணியும், லெக்செ அணியும் மோதின.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியானது 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
இதில் இன்டர் மிலான் அணி சார்பில், மார்கோ மான்கோசு 77ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
லெக்செ அணி சார்பில், அலெஸாண்ட்ரோ பெஸ்டோனி 71ஆவது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்தார்.
…………..
அலையன்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், ஜூவெண்டஸ் அணியும், பார்மா அணியும் பலப்பரீட்சை நடத்தின.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் ஜூவெண்டஸ் அணி 2-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.
ஜூவெண்டஸ் அணி சார்பில், கிறிஸ்டீயானோ ரொனால்டோ, 43ஆவது நிமிடத்திலும், 58ஆவது நிமிடத்தில் ஒரு கோலும் என இரண்டு கோல்கள் அடித்தார்.
பார்மா அணி சார்பில், ஆண்ட்ரியாஸ் கார்னெலியஸ் 55ஆவது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்தனர்.
………….
அடுத்தாக ஜேர்மனியில் நடைபெறும் புண்டர்ஸ்லிகா கால்பந்து தொடரின் 18ஆவது லீக் போட்டிகளின் முடிவுகளை பார்க்கலாம்,
ஒலிம்பியஸ்டேடியன் விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியொன்றில், ஹெர்தா அணியும், பேயர்ன் முனிச் அணியும் மோதின.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், பேயர்ன் முனிச் அணி 4-0 என்ற கோல்கள் கணக்கில் அபார வெற்றிபெற்றது.
இதில் பேயர்ன் முனிச் அணி சார்பில், தோமஸ் முல்லர் 60ஆவது நிமிடத்தில் ஒரு கோலும், ரொபர் லேவண்டோவ்ஸ்கி 73ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி ஒரு கோலும், தியாகோ அல்காண்டரா 76ஆவது நிமிடத்தில் ஒரு கோலும், ஐவன் பெரிசிக் 84ஆவது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்தனர்.



