இலங்கை
மசகு எண்ணெய் தொடர்பிலான முக்கிய தகவல் வெளியானது!


மசகு எண்ணெய் உள்ளடங்கிய இரு கப்பல்கள் எதிர்வரும் மாதம் நாட்டுக்கு வரவுள்ளதாக வலுசக்தி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மசகு எண்ணெய் கொண்ட கப்பல் எதிர்வரும் டிசம்பா் மாதம் 10ஆம் திகதி நாட்டுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அடுத்த கப்பல் டிசம்பர் மாத இறுதியில் நாட்டுக்கு வரவுள்ளதாகவும் ஜனவரி மாதத்தில் மேலுமொரு கப்பல் நாட்டுக்கு வரவுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.



